ஸ்டாலின்-அழகிரி இருவரின் படங்களையும் போஸ்டரில் அடித்து அசத்திய அழகிரி ஆதரவாளர்கள்...

மு.க.ஸ்டாலின்- மு.க.அழகிரி இருவரின் படங்களை பிரசுரித்து அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ஸ்டாலின்-அழகிரி இருவரின் படங்களையும் போஸ்டரில் அடித்து அசத்திய அழகிரி ஆதரவாளர்கள்...

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மதுரை பகுதியில் அழகிரி ஆதரவாளர்கள் அடித்த போஸ்டரில் இடம் பெற்ற வாசகம் தான் திமுக தலைவர் கலைஞரின் மகன் அழகிரியை திமுகவில் இருந்து விலகி வைக்க காரணமாக இருந்தது.

மதுரை பகுதியில் இருக்கும் அழகிரியின் ஆதரவாளர்கள் அழகிரியின் பிறந்த தினம் தங்களின் இல்ல விழாக்கள் ஆகியவற்றில் அழகிரியை புகழ்வதற்கு தனித்தன்மை மிக்க வாசகங்களைக் கொண்டு போஸ்டர்கள் அடித்து அசத்துவது வழக்கம். தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை பகுதியில் அரசியலில் அழகிரி ஜொலிக்க தொடங்கியது அவருடைய ஆதரவாளர்களின் இந்த போஸ்டர்கள் மூலமாகத்தான் என்ற  கருத்தும் நிலவி வந்தது.

திமுகவில் இருந்து அழகிரியை விலக்கி வைத்ததிலிருந்து அழகிரி வழியிலேயே அரசியல் பாதையை அமைத்து அழகிரி வழியிலேயே பயணத்தை மேற்கொண்டு வரும் ஒரு சிலர் மதுரையில் இன்னும் இருக்கிறார்கள். குறிப்பாக மதுரை முனிச்சாலை பகுதியில் அஞ்சாநெஞ்சன் அழகிரி குரூப்ஸ் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவினர் (அழகிரியின் ஆதரவாளர்கள்) அழகிரியை திமுகவில் இருந்து விலக்கி வைத்தது அவருடனேயே பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மதுரை பகுதி அழகிரி ஆதரவாளர்கள் அழகிரி பிறந்தநாள் மற்றும் தங்கள் இல்ல விழாக்களுக்கு அவரது படத்தை போட்டு பெரிய பெரிய போஸ்டர்கள் அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  அஞ்சா நெஞ்சன் அழகிரி குரூப்ஸை சேர்ந்தவர்கள்  திருமண விழா போஸ்டர் ஒன்றில் அழகிரி படத்தையும் ஸ்டாலின் படத்தையும் ஒரே அளவில் போட்டு போஸ்டர் அடித்து இருப்பது மதுரை பகுதி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போஸ்டரால் அழகிரி திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார் மீண்டும் இதுபோன்ற போஸ்டர்களால் அழகிரி திமுகவில் இணைக்கப்படும் நிலை வரும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.