குடிபோதையில் செவிலியர்களிடம் சலம்பலில் ஈடுபட்ட முதியவர்....

கும்பகோணத்தில் தடுப்பூசி செலுத்த வந்த செவிலியர்களிடம் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் சலம்பலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிபோதையில் செவிலியர்களிடம் சலம்பலில் ஈடுபட்ட முதியவர்....

கும்பகோணத்தில் செவிலியர்கள் வீதி வீதியாக முகாமிட்டு  தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். அதன்படி இன்று கும்பகோணம் செக்கடி தெருவில் தடுப்பூசி செலுத்த வந்த செவிலியரிடம் அங்கு வந்த குடிமகன் சலம்பலில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதேபோல் தெருக்களில் அமைக்கப்படும் தடுப்பூசி முகாம்களில்  குடிமகன்கள் வந்து தடுப்பூசி செலுத்த வற்புறுத்துவதும், வேறு இடத்திற்கு சென்று முகாம் நடத்துமாறு தகராறு செய்வதால் செவிலியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி முகாம்களில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுத்தபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.