பாஜக கவுன்சிலரை சபையிலே வெச்சு கிழித்து தொங்கவிடும் இளம் பெண் மேயர்... தாறுமாறாக எகிறும் லைக் ஷேர்!!

ஏ.கே.ஜி சென்டரின் எல்.கே.ஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலரை சபையிலே வெச்சு கிழித்த இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் உலாவும் இந்த வீடியோவுக்கு லைக்கு ஷேர் தாறுமாறாக எகிறுகிறது.  

பாஜக கவுன்சிலரை சபையிலே வெச்சு கிழித்து தொங்கவிடும் இளம் பெண் மேயர்... தாறுமாறாக எகிறும் லைக் ஷேர்!!

கேரளாவில் கடந்த வருடம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுர மேயராக தேர்ந்தெடுப்பட்டவர் ஆர்யா ராஜேந்திரன். இந்தியாவின் இளம் வயது மேயர்களில் ஒருவரான இந்த ஆர்யாவுக்கு வயது வெறும் 21 தான், இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன. 

இந்தநிலையில் தன்னை வயதை வைத்து விமர்சித்த பாஜக கவுன்சிலரை ஆர்யா ராஜேந்திரன், சபையிலே வைத்து வறுத்தெடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக கவுன்சிலர் ஒருவர் கடந்த 11 ஆம் தேதி தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆர்யா ராஜேந்திரனை அவரது வயதை வைத்து விமர்சிக்கும் விதமாக பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "பொருட்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ளவை. மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படுகின்றன. மேயர் நாற்காலியில் அமர்ந்து விளையாடும் ஏ.கே.ஜி மையத்தின், எல்.கே.ஜி குழந்தையால் அழிக்கப்படுவதற்கான பொருட்கள் அல்ல என கூறியிருந்தார். ஏ.கே.ஜி மையம் என்பது கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் ஆர்யா ராஜேந்திரன், பாஜக கவுன்சிலரை வறுத்தெடுக்க தொடங்கினர். ஆர்யா ராஜேந்திரன் அந்த கவுன்சிலரை நோக்கி, நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கடந்த 6  மாதங்களில் நீங்கள் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளிர்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த சபையில் உள்ள எவரும் இங்கு நியாயமான எதையும் கூறலாம். நீங்கள் அனைவரும் என்னை தனிப்பட்ட முறையில் வயது, முதிர்ச்சி தொடர்பாக விமர்சித்துள்ளீர்கள். ஆனால் இப்போது, நான் இதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இன்றும், இங்குள்ள சில உறுப்பினர்கள் இத்தகைய கருத்துக்களை கூறினர். இந்த வயதில் நான் மேயராகிவிட்டால், அதற்கேற்ப எவ்வாறு செயல்படுவது என்பது எனக்குத் தெரியும், அத்தகைய அமைப்பின் மூலம் நான் வளர்ந்தேன் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும் என்றார்.

ஆர்யா ராஜேந்திரன் பேசுகையில் பாஜக உறுப்பினர்கள் குறுக்கிட முயன்றனர். ஆனாலும், தனது பேச்சை நிறுத்தாத மேயர் ஆர்யா ராஜேந்திரன் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களை பார்த்து, இளைய தலைமுறையினர் உட்பட உங்களை பின்பற்றுபவர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடும் கருத்துக்களை நான் உங்களுக்குக் காட்டினால், இந்த மேயரும் வீட்டில் உள்ள சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் போன்றவர் என்பதை நீங்கள் உணர்வீர்கள். யார் ஒரு பெண்ணை அவமதித்தாலும் அது மோசமானது. நீங்கள் கொடுப்பதை மட்டுமே நீங்கள் திரும்பப் பெறுவீர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டுள்ளார்.