வெண்பனி படர்ந்த மலையில் எல்லை பாதுகாப்பு படையினர் உற்சாக நடனம்.. வைரல் வீடியோ உள்ளே

காஷ்மீரின் வெண்பனி படர்ந்த மலையில், எல்லை பாதுகாப்பு படையினர் உற்சாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெண்பனி படர்ந்த மலையில் எல்லை பாதுகாப்பு படையினர் உற்சாக நடனம்.. வைரல் வீடியோ உள்ளே

காஷ்மீரின் வெண்பனி படர்ந்த மலையில், எல்லை பாதுகாப்பு படையினர் உற்சாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு  கடும் குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் பெரும்பாலான நகரங்களில் மைனஸ் 6 டிகிரிக்கும் கீழாக குளிர் நிலவுகிறது.

இருப்பினும் எதையும் பொருட்படுத்தாது, நாட்டை பாதுகாக்கும் நோக்குடன், எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், காஷ்மீரின் பனி படர்ந்த மலையில், உடலையே உறைய செய்யும் கடுங் குளிரில் வீரர்கள் உற்சாக நடனமாடிய வீடியோவை தற்போது எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. 

இதனை பார்வையிட்டு வரும் நெட்டிசன்கள், வீரர்களின் தியாகத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.  கடந்த முறை  எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர், கால் புதைந்த உறைபனியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வீடியோவை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு, தேசப்பற்றை உணர்த்தியது குறிப்பிடத்தக்கது.