செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை- சிசிடிவி வைரல்...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்மநபர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை- சிசிடிவி வைரல்...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா அலுவலகம் எதிரே பஹீம் ரஹ்மான்- என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்வதோடு பழுதடைந்த செல்போன்களை சரி செய்யும் வேலையும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கடந்த 14-ம் தேதி வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு பஹீம் ரஹ்மான் வீட்டிற்கு சென்றுள்ளார். 15ஆம் தேதி காலை கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சுமார் பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய பழைய செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.  

பின்னர் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து சட்டரை திறந்து கடைக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளுடன் கடையின் உரிமையாளரான பஹீம் ரஹ்மான் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.