
டெல்லியில் ‘புல்டோசர் அரசியலுக்கு’ முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக முதலமைச்சர் கெஜ்ரிவால், எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லியின் முதலமைச்சராக கெஜ்ரிவால் இருந்தாலும், 3 மாநகராட்சிகளும் பாஜக வசம் உள்ளன. இதனால் அங்கு கடந்த சில நாட்களாக மக்களின் எதிர்ப்பையும் மீறி புல்டோசர் கொண்டு ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார்.
இது இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், புல்டோசர் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டிய முதலமைச்சர் கெஜ்ரிவால், இதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான மாற்று வழிகள் குறித்து ஆலோசித்தார்.