வி.பி.சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..!
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக பதவியேற்றபோது வழிப்பறி, கொள்ளையை தடுக்க முடியாததால் பதவி விலகியவர் வி.பி.சிங். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டையும் அவர் அமல்படுத்தினார்.
இந்நிலையில், கல்வி வேலைவாய்ப்பில் மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை அமரவைக்க இடஒதுக்கீட்டை உயர்த்திப்பிடித்த சமூகநீதிக்காவலர் விபி சிங்கின் பிறந்தநாளான இன்று, சமூகநீதி ஒளியை எங்கும் பரவச் செய்வோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி - வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' #VPSingh பிறந்தநாளான இன்று #SocialJustice எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம்!#ReservationIsOurRight pic.twitter.com/Gp7EezIPT6
— M.K.Stalin (@mkstalin) June 25, 2022