சென்னை-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த ஆணுறைகள்- வாகன ஓட்டிகள் முகம் சுழிப்பு

சென்னை-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் சிதறி கிடந்த காட்சி, அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.
சென்னை-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த ஆணுறைகள்- வாகன ஓட்டிகள் முகம் சுழிப்பு
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் வழியாக சென்னை-டெல்லி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் கியாதசந்திரா-பாவகடா இடைப்பட்ட பகுதியில் உள்ள சாலையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்தன. 

சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் இந்த ஆணுறைகள் சிதறி கிடந்தன. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் யாரோ மர்மநபர்கள் வாகனத்தில் பயன்படுத்திய ஆணுறைகள் எடுத்துச் சென்ற போது சாலையில் அவை விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என கூறினர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com