பெண் பயணிக்கும் பேருந்தின் நடத்துனருக்கும் இடையே மோதல் ...வைரலாகி வரும் வீடியோ..

பெண் பயணிக்கும் பேருந்தின் நடத்துனருக்கும் இடையே மோதல் ...வைரலாகி வரும் வீடியோ..

சென்னையில் மாநகர பேருந்தில் பயணித்த பெண் பயணிக்கும், பேருந்தின் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் வழியாக இன்று பயணிகளை ஏற்றி வந்த மாநகரப் பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவருக்கும், பேருந்தின் நடத்துனருக்கும் இருக்கை தொடர்பான பிரச்சனையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பெண் பயணி நடத்துனரை ஆபாசமாகப் பேசி, கையால் தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்து நடு வழியில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற பயணிகள் கீழே இறங்கிய நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பயணி கீழே இறங்க மறுத்து தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் சக பயணிகள் அந்த பெண் பயணியை தொடர்ந்து வசைபாடத் தொடங்கினர். 

மேலும் படிக்க |  வேலை கிடைக்காத காரணத்தினால் தற்கொலை...போலீசார் மீட்பு...

சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் பெண் பயணி தொடர்ந்து நடத்துனரை ஆபாசமாகத் திட்டி கையால் தாக்கி வந்த நிலையில், பொறுமை இழந்த நடத்துனரும் பதிலுக்கு பெண் பயணியை கையால் தாக்கி கீழே இறங்குமாறு வலியுறுத்தினார். நடுவழியில் பேருந்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த செம்பியம் போலீசார் பெண் பயணியையும், நடத்துனரையும் சமாதானப் படுத்தி நடுவழியில் நிறுத்தப்பட்ட பேருந்தை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். மேலும், இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.