தன்னுடைய வேலையை தானே செய்து கொள்ளும் க்யூட் நாய்.. வைரல் வீடியோ உள்ளே

உரிமையாளருக்கு பல்வேறு உதவிகள் செய்யும் க்யூட் நாய் ஒன்று இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

தன்னுடைய வேலையை தானே செய்து கொள்ளும் க்யூட் நாய்.. வைரல் வீடியோ உள்ளே

மாயா என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்மோயிட் என்ற வகையைச் சேர்ந்த பெண் நாய் மனிதர்களை போன்று பல வேலைகளை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மாயா தான் விளையாடி முடித்த பிறகு பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்களை, அதற்கான கூடையில் வைக்கிறது.

உரிமையாளரைத் தினமும் காலை மிகவும் கனிவான முறையில் எழுப்பி விடுகிறது. தனது உரிமையாளருக்கு உணவைப் பரிமாற முயற்சிக்கிறது. உரிமையாளர் ஷாப்பிங் முடித்து வந்தால், பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல உதவுகிறது.

இந்த நாயின் செயல்களை வீடியோவாக எடுத்த அதன் உரிமையாளர் அதனை அவரது சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோவாக ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிந்து வருகிறது.

இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர் . இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ள இன்ஸ்டாகிராம் வாசிகள் நாயின் நற்குணங்கள் மற்றும் அதனை அப்படி வளர்த்த நாயின் உரிமையாளரையும் பாராட்டி வருகின்றனர் .