மேடையில் நடனமாடியவர் சரிந்து விழுந்து மரணம்...

மேடையில் நடனமாடியவர் சரிந்து விழுந்து மரணம்...
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில் உறவினர் திருமண விழாவில் மகிழ்ச்சியுடன் நடனமாடிய நபர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலி மாவட்டத்தில் குடா ராம் சிங் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடனமாடிய சலீம் பாய் ரநவாஸ் என்பவர் கலந்துக் கொண்டார். இவர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு  சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நன்றாக ஆடிக்கொண்டிருந்தவர், அசதியில் விழுந்தார் என நினைத்த அவரது குடும்பத்தினருக்கு அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com