ஒரு சீனையும் விடலையே.!! புஷ்பாவாகவே மாறிய டேவிட் வார்னர்.. வைரல் வீடியோ

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படக் காட்சிகளில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் முகத்தை மார்ஃப் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சீனையும் விடலையே.!!  புஷ்பாவாகவே மாறிய டேவிட் வார்னர்.. வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய பேட்டிங் ஸ்டார் டேவிட் வார்னர், அவருடைய பேட்டிங்கைத் தாண்டி இன்ஸ்டா போஸ்ட்களுக்கும் தனி ரசிகர்கள் உண்டு. அதற்கு காரணம் பிரபல நடிகர்களைப் போல் தன்னை சித்தரித்து அவர் வெளியிடும் வீடியோக்கள் இன்ஸ்டாவில் ரசிகர்களால் பிரபலமாக பார்க்கப்பட்டு வைரலாக்கப்பட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் புஷ்பா கதாபாத்திரமாகவே மாறி அவர் போட்ட ஆட்டங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பதிவு செய்த வேளையில் இந்த வீடியோ இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. அந்த வீடியோவின் மேல், நான் நடிப்பை அவ்வளவு எளிதானதாக வெளிப்படுத்தும் அல்லு அர்ஜூனாக இருந்திருக்கலாம் என விரும்புகிறேன் எனப் பதிவிட்டு #pushpa #india ஆகிய ஹேஷ்டேகுகளின் கீழ் அதை வெளியிட்டுள்ளார்.