மேகங்கள் இப்படி வித்தியாசமான வடிவில் இருக்க காரணம் என்ன தெரியுமா.? 

மேகங்கள் இப்படி வித்தியாசமான வடிவில் இருக்க காரணம் என்ன தெரியுமா.? 

மேகங்கள் கீழே ஒரே சீராக தட்டையாகவும், மேலே குமிழ்களாகவும் இருக்கும் காரணம் பற்றி இதில் பார்க்கலாம்.!  

மேகங்கள் தான் மழையை கொடுக்கிறது என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால் அனைத்து மேகங்களும் மழையை கொடுப்பதில்லை. அதிலும்  வெயில் அதிகமாக இருக்கும் போது,சில சமயம் மேகங்கள்  கீழே  ஒரே சீராக  தட்டையாகவும் மேலே குமிழ்களாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள். பலர் அதை கண்டுகொள்ளாமல் விட்டாலும், சிலருக்கு அது ஏன் அப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கும். 

பொதுவாகவே காற்றில் உள்ள நீராவி நமது கண்களுக்கு தெரியாது. ஆனால் உஷ்ணத்தால் மேலே செல்லும் நீராவி ஒரு குறிப்பிட்ட உயரத்தில் குளிர்ச்சியால் நீர்த்திவலையாக மாறும். அதுவே தட்டையான கீழ்மட்டம். மேலும் அதிக நீராவி மேலே செல்லச்செல்ல  தட்டையான கீழ்மட்டத்தை தாண்டி குமிழி மேகங்களாக மாறுகிறது. இதுவே நாம் காணும் அந்த வித்தியாசமான மேகங்களின் தோற்றங்களுக்கான காரணம்.