
ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருந்து வரும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், சமீபத்தில் 43 பில்லியன் டாலருக்கு டுவிட்டரின் பங்குகளை வாங்கியிருந்தார்.
இந்தநிலையில், சுமார் 269 புள்ளி 5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய அவர், தனக்கு என சொந்த வீடு இல்லை என கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பதிலளித்து பலரையும் வியக்க வைத்துள்ளார்.
மேலும் நண்பர்களின் வீடுகளில் தான் தங்கி வருவதாகவும், பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தனக்கு என ஜெட் விமானம் ஒன்று மட்டுமே வைத்துள்ளதாகவும், பணியிலிருந்து அதிகம் விடுப்பு எடுத்ததும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.