சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...

ராமநாதபுரத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இந்த நிலையில் அதிமுக தொண்டர்களில் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சசிகலாவிடம் பேசிய அதிமுக நிர்வாகிகளை கட்சியில்ம் இருந்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் நீக்கி வருகின்றனர்.இந்த நிலையில் ”சின்னம்மா தலைமையில் ஒற்றை தலைமையை ஏற்போம்” என ராமநாதபுரத்தில் சசிகலாவை வரவேற்று போஸ்டார் ஒட்டியுள்ளனர்.

 புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் ஆட்சியர் அலுவலகம் நீதிமன்ற வளாகம் பாரதிநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஒற்றை தலைமையை ஏற்று களப்பணி ஆற்றுவோம் சின்னம்மா தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டியால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.