காவல் நிலையம் அருகிலேயே மது விற்பனை செய்யும் பெண்... வைரல் வீடியோ...
திருப்பாலபந்தல் காவல் நிலையம் அருகில் வீட்டில் கள்ளத்தனமாக மது விற்பனை ஜோராக நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி பரவி வருகிறது.

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலாபந்தல் கிராமத்தில் காவல் நிலையம் அருகில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வரும் வீடியோ தற்பொழுது வேகமாக வைரலாகி பரவி வருகிறது.
அந்தப் பெண் வீட்டில் மதுபான பார் போன்று கிளாஸ், மதுபான குப்பி உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொடுத்து பணம் பெறும் நிகழ்வு வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க | ரோட்டில் நிர்வாணமாக நின்ற புள்ளிங்கோ... வெளுத்து விட்ட பொதுமக்கள்..
இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் திருபாலபந்தல் போலீசார் மாமூல் பெற்றுக் கொண்டு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பதற்கு அனுமதிப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வீடியோ ஒன்றை பரப்பி வருகின்றனர்.
தற்பொழுது அந்த வீடியோ திருக்கோவிலூர் உட்கோட்ட காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையம் அருகிலேயே வீட்டில் பெண் ஒருவர் மதுபானம் விற்பனை செய்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி பரவி வரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை...