கூகுளைப் பார்த்து கால்வாயில் வண்டியை விட்ட கேரள குடும்பம்:

கேரளாவில் ஒரு குடும்பம், கூகுள் மேப்புகளைப் பார்த்து, கால்வாய்க்குள் விட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூகுளைப் பார்த்து கால்வாயில் வண்டியை விட்ட கேரள குடும்பம்:

முன்பெல்லாம், வழி தெரிய வேண்டும் என்றால், பூக்கடைக்காரரையோ அல்லது ஆட்டோ அண்ணனையோ கேட்பது வழக்கம். ஆனால், எப்போது நம் கையில் ஒரு குட்டி செங்கல் வந்ததோ, அப்போதே மனிதர்களிடம் பேசுவது என்ன, முகத்தை நிமிர்த்திப் பார்ப்பது கூட இல்லாமல் போய் விட்டது. மோபலைப் பார்த்துக் கொண்டே சமைப்பது, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது முதல், இப்போது வழி தேடி கைலாசம் வரை கூகுள் மேப் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டுவது வரை நாம் மொபைல்களுக்கு அடிமை ஆகி விட்டோம்.

அந்த வகையில், கடவுளின் இடமான கேரள மாநிலத்தில், ஒரு குடும்பம், வழிக்காக கூகுள் மேப்புகளை நம்பி, காரை கால்வாய்க்குள் விட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிதான பாதிப்பு இல்லை என்றாலும், இச்சம்பவம், பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கேரளாவின் கொட்டயம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொட்டயத்திற்கு அருகிலுள்ள பரச்சல் என்ற கால்வய் உள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து கும்பநாடு சென்று கொண்டிருந்த ஒரு குடும்பம், அப்பகுதியில் பயணம் செய்த போது, கூகுள் மேப்புகளையே பார்த்துக் கொண்டு, அந்த பரச்சல் கால்வாயில் காரை விட்டுள்ளனர். இச்சம்பவம், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 10:30 மணிக்கு அரங்கேறியுள்ளது. 

ஆனால், அப்பகுதி மக்கள் இதனை உடனே கவனித்ததால், எந்த அசம்பாவிதமும் நட்ப்பதற்கு முன்பே அவர்கள் காப்பாற்றப்பட்டனர். மேலும், காரை கயிறு கட்டி இழுப்பதற்குள், 300 மீட்டர்கள் வரை தண்ணீருக்குள் சென்று விட்டது. ஆனால், நல்ல வேளையாக அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.