
ஆப்கானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அந்நாட்டு பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம் ஆகியவற்றிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியவாறு தொலைக்காட்சியில் தோன்றினர். ஹிஜாப் அணிந்திருக்கிறோம், தலைமுடியை மறைத்துக்கொள்கிறோம், ஆனால் தொடர்ந்து முகத்தை மூடிக்கொண்டு பேசுவது மிகவும் கடினம் என பெண் செய்தி தொகுப்பாளர்கள் கூறினர். தாலிபான்களின் இப்போக்கை மாற்ற சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.