
நடிகை ஜெனிலியா, இந்தி நடிகர் சல்மான் கானுடன் உற்சாகமாக நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சல்மான் கான் தனது 56வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள பன்வெல் பண்ணை வீட்டில் நேற்று கொண்டாடினார்.
இதனையொட்டி பிரபலங்கள் பலரும் இணையதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், டிவிட்டரில் வாழ்த்து கூறி பதிவிட்டிருந்த நடிகை ஜெனிலியா, நிகழ்ச்சி ஒன்றில் சல்மான்கானுடன் உற்சாகமாக நடனமாடிய வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.
அக்கம்பக்கத்தில் இருப்போரை கண்டுகொள்ளாது, ஜெனிலியா நடனமாடிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.