மோசமான சாலையின் நிலையை செய்தியாளர் போல் விவரித்த சிறுமி- வைரல் வீடியோ

காஷ்மீரில், செய்தியாளர் போல் சிறுமி ஒருவர் சாலையின் மோசமான நிலையை எடுத்துரைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோசமான சாலையின் நிலையை செய்தியாளர் போல் விவரித்த சிறுமி- வைரல் வீடியோ

காஷ்மீரில், செய்தியாளர் போல் சிறுமி ஒருவர் சாலையின் மோசமான நிலையை எடுத்துரைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தனது வீடு அருகே போடப்பட்டுள்ள சாலைகள் மோசமாக இருப்பதாகவும், இதனால் விருந்தினர்கள் வர முடிவதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதனை கேமரா மூலம் படம் பிடித்து காட்டியிருந்தார்.  

சிறுமியின் இந்த செயலை இணையத்தில் பாராட்டிய பலரும், அரசு விரைந்து சாலையை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.