55 முதியவருக்கு மனைவியை விற்று ஸ்மாட்போன் வாங்கிய கணவன் கைது...

ஒடிசாவில் மனைவி விற்று ஸ்மாட்போன் வாங்கிய கணவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

55 முதியவருக்கு மனைவியை விற்று ஸ்மாட்போன் வாங்கிய கணவன் கைது...

ஒடிசா மாநிலம் பொலன்கிர் மாவட்டத்தில் உள்ள சுலேகலா என்ற ஊரைச் சேர்ந்த 17வயதான ராஜேஷ் ராணா  இவருக்கு பேஸ்புக் மூலம் பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சில நாட்கள் பேஸ்புக் மூலம் பழகிய நிலையில் காதலிக்கத் தொடங்கினர். அவர்களது காதல் பெற்றோருக்குத் தெரியவந்தது. எனவே இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்துவைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். இருவருக்கும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து கணவன் மனைவி இருவரும் ராஜஸ்தானில் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக வந்தனர்.

ஆனால் வேலைக்குச் சேர்ந்த சில நாள்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவருக்குத் தனது மனைவியை ராஜேஷ் ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகச் கொல்லப்படுகிறது. மனைவியை விற்பனை செய்த பணத்தில் புதிய ஸ்மார்ட் போன் வாங்கியதோடு, ஆடம்பரமாக செலவு செய்திருக்கிறார். அதோடு தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து, உங்களது மகள் யாருடனோ ஓடிவிட்டார் எனத் தெரிவித்தார் ராஜேஷ். ஆனால் இதனை நம்பாத அப்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். காணாமல்போன பெண் ராஜஸ்தானில் இருப்பது தெரிய வந்தது.

 இதையடுத்து ஒடிசாவில் இருந்து தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் விரைந்தனர். அவர்கள் ஒடிசாவில் உள்ள பரன் என்ற கிராமத்தில் பெண் இருப்பதைக் கண்டுபிடித்து அங்கு சென்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் முண்டா கூறுகையில், 55 வயது நபர் பெண்ணை ரூ.1.80 லட்சத்துக்கு வாங்கி இருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும் ராஜஸ்தான் போலீஸாரின் துணையோடு பெண்ணை மீட்டோம். ஆனால் அப்பெண்ணை அழைத்து செல்ல அக்கிராம மக்கள் அனுமதிக்கவில்லை. 

 போலீஸ் வேனை மறித்துக்கொண்டு அனுமதிக்க மறுத்தனர். அவர்களிடமிருந்து போராடி பெண்ணை மீட்டோம். பெண்ணை விற்பனை செய்த ராஜேஷ், தான் தனது மனைவியை விற்பனை செய்யவில்லை என்றும், இருதய சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் மனைவியை ரூ.60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன் என்றும் தெரிவித்திருக்கிறார். ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறுவர் முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.