கள்ளகாதல் ஜோடியை சோறு,தண்ணி இல்லாமல் இரண்டு நாட்கள் கட்டி வைத்து உதைத்த ஊர் மக்கள்...

கர்நாடகாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணையும், இளைஞரையும் இருநாட்களாக கம்பத்தில் கட்டி வைத்து, சோறு, தண்ணீர் இல்லாமல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளகாதல் ஜோடியை சோறு,தண்ணி இல்லாமல் இரண்டு நாட்கள் கட்டி வைத்து உதைத்த ஊர் மக்கள்...

கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த ஹெம்மேராகா கிராமத்தில் திருமணமான பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கிராம மக்கள், பெண்ணையும், இளைஞரையும்  கிராமத்திற்கு மத்தியில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து இரண்டு நாட்கள் உணவு இன்றி தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த நஞ்சண்குடி போலீசார், அப்பெண்ணையும், இளைஞரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், இருவரையும் கட்டி வைத்து தாக்கியதாக 50பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.