எரிக்க முடியாத புத்தகம் - ஒரு லட்சம் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பு

எரிக்க முடியாத புத்தகம் - ஒரு லட்சம் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பு

Handmaid’s tale என்னும் புத்தகத்தின் எரிக்க முடியாத பிரதி, அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் எழுதிய இப்புத்தகம் 1985ஆம் ஆண்டு வெளியானது. பாலியல் வெளிப்படைத்தன்மை மற்றும் கிறிஸ்தவர்களை புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டு இருந்ததால் போர்டுகல், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது.

இதனிடையே நெருப்பை எதிர்க்கும் பூச்சு கொண்ட தாளில் அச்சடிக்கப்பட்டு, நிக்கல் கம்பியால் தைக்கப்பட்டு எரிக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்ட Handmaid’s tale புத்தகத்தின் பிரதி ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.