சர்வதேச ஆண்கள் தினம் இன்று ... இணையத்தில்  வைரலாகும் மீம்ஸ் ...

சர்வதேச ஆண்கள் தினம் இன்று ... இணையத்தில்  வைரலாகும் மீம்ஸ் ...

ஆண்டுதோறும் நவம்பர் 19 அன்று சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.பொதுவாக பெண்களுக்கான தினம் என்றல் எல்லோராலும் விமர்சியாக கொண்டாடப்படும்.ஆண்கள் எவ்வளவு தான்  கடின உழைப்பு உழைத்தாலும் என்ன பாடு பட்டாலும் அவர்களுக்கு அவ்வளவு மதிப்பு சமூகத்தில் கிடைப்பதில்லை.அதனை நினைவில்லை கூறும் வகையில் தான் மீம் கிரியேட்டார்கள் இணையத்தில் மீம்ஸ் போடு தாக்கி வருகின்றனர். இந்த நாள் நம் வாழ்வில் உள்ள மனிதர்களையும், அவர்கள் நமது சமூகத்திற்கு பங்களிக்கும் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளையும் மதிக்கிறது. பெண்களை போலவே ஆண்களும் பல பொறுப்பாகளை தாங்கி வருகின்றனர்.

ஆண்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வரும் நேர்மறையான மதிப்பைக் கொண்டாடுகிறது மற்றும் நேர்மறையான முன்மாதிரியாக மாற அவர்களை ஊக்குவிக்கிறது. இது பிப்ரவரி 1992 இல் தாமஸ் ஓஸ்டரால் தொடங்கப்பட்டது. இருப்பினும்,மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளரான டாக்டர் ஜெரோம் டீலக்சிங், நவம்பர் 19, 1999 அன்று சர்வதேச ஆண்கள் தின திட்டத்தை நிறுவினார்.ஆண்களும் ஒரு தந்தையாக,மகனாக, கணவனாக,சகோதரராக,தனக்காகவும் தனது குடும்பத்திறகாகவும் அயராது பாடு பட்டு வருகின்றனர்.நாமும் ஆண்களை  போற்றி வாழ்த்துவோம்.

__ஸ்வாதிஸ்ரீ