சேலைக்காக குடுமி பிடி சண்டையிட்ட இரு பெண்கள்...இணையதளத்தில் வைரலாகும் வீடியோ...!!

சேலைக்காக குடுமி பிடி சண்டையிட்ட இரு பெண்கள்...இணையதளத்தில் வைரலாகும் வீடியோ...!!

கர்நாடகாவில் தள்ளுபடி விலை சேலைக்காக இரண்டு பெண்கள் சண்டையிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரம் பகுதியில் பட்டு தொழிற்சாலை நிறுவனம் சார்பில் தள்ளுபடி விற்பனை கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியில் மிகக் குறைந்த விலையில் சேலைகள் கிடைத்ததால் கண்ணில் பட்ட சேலைகளை எல்லாம் பெண்கள் அள்ளிக் கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க : பாஜக கோரிக்கை... மனுவை திரும்ப பெற்ற அதிமுக வேட்பாளர்...!

அப்போது ஒரே சேலையை எடுத்த இரண்டு பெண்கள், புடவை தனக்குத்தான் வேண்டும் எனக் கூறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு கட்டிப் புரண்டு சண்டையிட்டனர். இது புறம் நடந்துக்கொண்டிருக்க, ஆனால் அதை எதையுமே பொருட்படுத்தாமல், மற்ற பெண்கள் புடவைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.