
கொரோனா ஒழிய வேண்டி ஜப்பானில் உள்ள 187 அடி உயரம் கொண்ட பௌத்த பெண் கடவுளின் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்த பரவிய கொரோனா வைரஸ், தற்போது வரை உருமாற்றம் பெற்று உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும், கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதில் சிக்கலே நிலவுகிறது. இருப்பினும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முக்கவசம் ஒன்றே சிறந்த வழி என கூறப்பட்டு வருகிறது. இதுநாள் வரை மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிந்து வந்த நிலையில், ஜப்பானில், சிலைக்கு முகக்கவசம் அணிவித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. கொரோனாவை ஒழிக்க வேண்டி, ஜப்பான் நாட்டின் Fukushima-வில் உள்ள கோயில் ஒன்றில் கருணை தேவி என வணங்கப்படும் Kannon கடவுளின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 187 அடி உயரம் கொண்ட இந்த வெள்ளை நிற சிலையின் முகத்தில் 35 கிலோ எடையிலானபிங்க் நிற மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது.