"பிரதமர் சிஏஜி அறிக்கைக்கு நிச்சயம் பதில் சொல்வார்" -தமிழிசை!

"பிரதமர் சிஏஜி அறிக்கைக்கு நிச்சயம் பதில் சொல்வார்" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சொளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி வாயிலாக காலை 11:30 மணியளவில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். 

தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர் காவல்துறையினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பல முன்னேற்றங்களை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. 33 சதவிகீதம் இட ஒதுக்கீடு கவலை அளிக்க கூடியது இல்லை. ஆனால் இங்கு இருக்கக் கூடியவர்களுக்கு அது கவலை அளிக்கிறது. காரணம் என்னவென்றால் நாடு வேகமாக முன்னேறுகிறது. அதைப் பற்றி தவறு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மோடி 9 ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார்.

கடுமையான குடிநீர் பஞ்சம் தென் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தொகுதியில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது என கேள்விப்பட்டேன். வீடு தோறும் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்து இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி மக்களுக்கு செயல்பட வைக்க வேண்டும். 

அமைச்சர் கீதாஜீவன் "33 சதவிகித இட ஒதுக்கீடு வரும் ஆனா வராது" என்று நேற்று கூறினார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு? மகளிர் இட ஒதுக்கீடு 33% எங்களை பொறுத்த அளவிற்கும் வரும். அவர்களை பொறுத்த அளவிற்கு வராது. அவர்கள் எதிர்மறையாக சிந்திக்கிறார்கள். வராது என்று சொல்லிக் கொண்டிருந்தால் பாராளுமன்றத்திலும் இதுதான் அவர்களுடைய மனநிலை, அவர்கள் வரவேண்டாம் என்று நினைத்தார்கள். முன்னர் கூட்டணி ஆட்சியில் அதிக பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால்  கொண்டும் வர முடியவில்லை. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்படுகிறது.  

கணக்கெடுத்து 2028 அல்லது 29ல் வரும். இதற்கு முன்னர் வருமா? வராதா என்றனர். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவர்கள் இப்படி பேச கூடாது. 33 % இட ஒதுக்கீடு பல பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஒதுக்கும்போது அவர்களுக்கு எப்படி பிடிக்கும். அரசியலில் இருப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதே என்று பெண்ணாக இருந்து முதலில் வரவேற்போம். அதற்கு அப்புறம் விமர்சிப்போம். இதுதான் இங்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. நல்லது செய்தாலும் வரவேற்பது கிடையாது. இது மிகப்பெரிய சமுதாயப் புரட்சி 13 பேர் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும், 77 பேர் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருக்க போகிறார்கள். சிறிய மாநிலம் புதுச்சேரியில் 13 பெண் எம்எல்ஏக்கள் உட்காரப் போகிறார்கள். என்னதான் விமர்சனம் செய்தாலும் நன்றியை சொல்லிக் கொள்கிறோம்

காவிரி நீர் குறித்து பேசுகையில்? காவிரி நீர் வரும் ஆனால் வராது. தற்போது கூட்டணியில் தானே உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுவர வேண்டியது தானே, ஒன்பது வருடமாக நாடு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது. சென்னையில் இசை கச்சேரியை இவர்களால் கட்டுப்படுத்தப்படுத்த முடியவில்லை. ஆனால் டெல்லியில் மிகச் சிறப்பாக ஜி 20 மாநாடு நடத்தினோம். 

சிஏஜி அறிக்கை பற்றி பேசுகையில், 2015 இல் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டல் 2023 முடிவடையும். திட்டம் என்று வரும் போது எட்டு வருடம் ஆகும். இது தான் எதார்த்தமான உண்மை. உலகத்துக்கே தெரியும் மோடி ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க: தயார் நிலையில் 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு!