
திருவண்ணாமலை | வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் குடிபோதையில் இருக்கும் நபரை பேருந்து நடத்துனர் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வந்தவாசி செய்யாறு சாலையில் போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார் இவர் 477 என்ற வழித்தடத்தில் உள்ள அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
இந்த அரசு பேருந்து வந்தவாசி திருவண்ணாமலை பெங்களூர் வழியாக சென்று மீண்டும் வந்தவாசிக்கு இரவு சுமார் 11 மணியளவில் அரசு பேருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தது.
இந்த அரசு பேருந்தில் குடிபோதையில் ஒரு நபர் பயணம் செய்துள்ளார் அந்த நபரை அரசு பேருந்து நடத்துனர் பிரகாஷ் என்பவர் பேருந்தில் இருந்து இறங்க சொல்லி இருக்கிறார்.
அப்போது அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்காததால் திடீரென அந்த நபரை நடத்துனர் கீழே தள்ளி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது.
மேலும் படிக்க | ஹெட்போனுக்கு சண்டை... இளைஞரின் மண்டை உடைந்தது...