சச்சினின் முதல் சென்சூரி இன்று தான்! நினைவுக் கூர்ந்த BCCI!!!

சர்வதேச அளவிலான போட்டிகளில் சச்சின் தனது முதல் சதத்தை இன்று, அதாவது ஆகஸ்ட் 14, 1990-இல் குவித்தார்.

சச்சினின் முதல் சென்சூரி இன்று தான்! நினைவுக் கூர்ந்த BCCI!!!

கிரிக்கெட்டின் கடவுளாக பலரால் போற்றப்படும் சச்சின் டென்டுல்கர், பல நூறு சதங்களைக் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரராக, உலகளவில் அறியப்படுகிறார். உலகின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராக அறியப்படும் சச்சின், உலகின் சிறப்பான பந்துவீச்சாளர்களின் திறனையும், மண்ணுக்குள் புதைத்த பெருமை பெற்றவர். மேலும், சர்வதேச அளவில் பல சாடனைகளைப் படைத்த பெருமையும் அவருக்கே!

கிரிக்கெட் கடவுள்:

மேலும், சர்வதேச அளவிலான போட்டிகளில், 100 சதங்கள் பெற்ற ஒரே கிரிக்கெட் வீரராக இருக்கும் சச்சின் சர்வதேச போட்டிகளில் எடுத்த முதல் சதம் இன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 14, 1990 இல் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை குவித்த சச்சின், தனக்கான ஒரு பெரும் சகாப்தத்தையே உருவாக்கத் தயாரானார்.

முதல் சதம்:

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 68 ரன்களை எடுத்த பிறகு, மாஸ்டர் பிளாஸ்டர் பார்வையாளர்களின் இரண்டாவது இன்னிங்ஸில் 119 ரன்களை விளாசினார். டெஸ்ட்டை டிரா செய்து சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக மும்முறை இலக்கை எட்ட உதவினார்.

டீனேஜில் தொடங்கிய கிரிக்கெட் பயணம்:

அந்த நேரத்தில் சச்சினின் வயது 17. வெறும் 112 நாட்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த மூன்றாவது இளைய வீரர் ஆனார். சுமார் எட்டு போட்டிகள் விளையாடிய பின்பு தான், பேட்டிங் ஜாம்பவானாகி, இந்தியாவுக்காக தனது முதல் சதத்தை பெற்றுத் தந்தார்.

ரன்களின் என்சைக்ளோபீடியா:

நவம்பர் 1989ம் ஆண்டு, இந்தியாவின் பெரும் போட்டியாளரான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தான் அதனது அறிமுக பேட்டிங் செய்தார். தனது பேருக்கு பின்னால், 100 சர்வதேச சதங்கள் பெற்று, உலகளாவிய கிரிக்கெட்டில் இது வரை, 200 டெஸ்டுகளில் 15,921 ரன்கள், 463 ODIயில் 18,426 ரன்கள் மற்றும் 1 டி20ஐ -யில் 10 ரன்கள் குவித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். இந்த நாளை நினைவு கூர்ந்த BCCI, த்னது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.