விவசாயம் குறித்து பள்ளி மாணவியின் பாடல் வைரல்...

10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி வேளாண்மை, பெண்கள் நிலை, அரசு பள்ளி சேர்க்கை குறித்து தனது குரல் வளத்தால் பாடி அசத்தி வருகிறார்.
விவசாயம் குறித்து பள்ளி மாணவியின் பாடல் வைரல்...
Published on
Updated on
1 min read

தஞ்சை | வல்லம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இசை பயிற்சி இல்லாமல் தமிழாசிரியை எழுதிய பாடல்களுக்கு திரை இசை மெட்டில் பாடி அசத்தி வருகிறார். தஞ்சையை அடுத்த வல்லம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி கனிமொழி, தந்தையை விபத்தில் இழந்து தாய் அரவணைப்பில் படித்து வருகிறார்.

நல்ல குரல் வளம் கொண்ட கனிமொழியை அடையாளம் கண்ட பள்ளி தமிழாசிரியை கெஜலட்சுமி தான் எழுதிய பாடல்களுக்கு திரை இசை மெட்டில் மாணவி கனிமொழியை பாடவைத்தார். முறையாக இசை பயிற்சி பெறாத கனிமொழி மெட்டுகளை உள் வாங்கிக் கொண்டு பாடி வருகிறார்.

அரசு பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,

திறந்து இருக்கு திறந்து இருக்கு அரசு பள்ளியே
தயக்கமென்ன மயக்கமென்ன இங்கு சேர்ந்திட
காசு பணம் தேவையில்லை கல்வி கற்றிட
காமராசர் கனவெல்லாம் வெற்றி பெற்றிட என்ற பாடல்,

சமூகத்தில் பெண் தான் அனுபவித்து வரும் துன்பங்களை வெளிப்படுத்தும்

கண்ணுக்குள்ள உசிற வச்சி அல்லாடுறோம்
கடமை பெனும் பாரம் தூக்கி தள்ளாடுறோம்.
பொம்பளையா பொறந்து வச்சோம்
புள்ளைக்குட்டி பெத்து வச்சோம்
பொழுதுக்கும் வேலை செஞ்சி புண்ணாகுறோம் என்ற பாடல்,

கார்ப்பரேட் நிறுவனங்கள் சயலாபத்திற்காக வேளாண்மை எப்படி அழிக்கப்படுகிறது என்பதை கண்ணீர் வரவழைக்கும் வகையிலான

வெளஞ்ச தாயி வயித்துக்கள்ள
வெடிய வச்சு தகர்க்க வா
வேளாண்மைய அழிக்கவா
பொறந்த மண்ண கடுகாடா
புள்ளக்குட்டி பார்க்க வா

உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார் மாணவி கனிமொழி. இந்த வீடியோ தற்போது இணையத்த்ல் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com