இதுக்கு பேர் தான் தித்திக்கும் தீபாவளியோ- ஷில்பா ஷெட்டியின் வைரல் வீடியோ

இதற்கு பேர் தான் தித்திக்கும் தீபாவளியா என பார்ப்போர் கேட்கும் அளவிற்கு, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ரசகுல்லாவை கடித்தபடியே தனது ரசிகர்களுக்கு தீபாளி வாழ்த்து சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. தீபாவளி பொதுவாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிலர் தீபாவளி பண்டிகையை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதுடன் ரசகுல்லாவை கடித்தவாறே அனைவரும் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.