6 புலிகள் ஒரே நேரத்தில் ஒய்யார நடை போட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரல்...

மகாராஷ்டிர மாநிலம் உம்ரெட் கர்ஹண்ட்லா வனவிலங்கு சரணாலயத்தில் 6 புலிகள் ஒரே நேரத்தில் ஒய்யார நடை நடந்து வந்ததன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

6  புலிகள் ஒரே நேரத்தில் ஒய்யார நடை போட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரல்...

 நாக்பூர் அருகே உம்ரெட் கர்ஹண்ட்லா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை சரணாலய நிர்வாகம் சஃபாரி ரைட் கூட்டி செல்வது வழக்கம். அப்படியொரு சமயத்தில் 6 புலிகள் ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஒய்யார நடை நடந்து வந்தன.  இதனை சுற்றுலா பயணி ஒருவர்  வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.