”தாண்டியா ஆட்டமும் ஆட...” - நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...!

”தாண்டியா ஆட்டமும் ஆட...” - நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...!

குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை உடன் ஆடும்படி நடனக்கலைஞர்கள் கேட்டதால் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நடனமாடினார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில்  தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும விதமாக குஜராத்  மற்றும் மகாராஷ்டிரா தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில், புதுச்சேரியில் வாழும் குஜராத்தி மற்றும் மராத்தி சமூகத்தினர் மற்றும் ரங்க்லீலா கலை குழுவினர் கலந்துகொண்டு, தாண்டியா நடனமாடி விழாவை கொண்டாடினர்.

இதையும் படிக்க : நீண்ட நேரமாகியும் வருகை புரியாத அதிகாரிகள்...ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய கிராம மக்கள்...!

அப்போது, குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை உடன் ஆடும்படி நடனக்கலைஞர்கள்  கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அவர்களுடன் சேர்ந்து தாண்டியா நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.