10 பேருடன் வந்த பாஜக தலைவர்...! அடித்து அரைநிர்வாணமாக்கி ஓட விட்ட இந்து மக்கள் கட்சியினர்...!!

10 பேருடன் வந்த பாஜக தலைவர்...! அடித்து அரைநிர்வாணமாக்கி ஓட விட்ட இந்து மக்கள் கட்சியினர்...!!

தாராபுரம் பாஜக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே மோதல் நடந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தாராபுரம் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக உள்ளவர் மங்கலம் ரவி இவருக்கும் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ள ஈஸ்வரனுக்கும் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள கொங்கு மெஸ் ஹோட்டல் முன்பு நேற்று இரவு மோதல் ஏற்பட்டது.

நேற்று மனதின் குரல் நூறாவது வார நிகழ்ச்சி பாஜக சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் குண்டடம் ருத்ரகுமார் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவி கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை நேரில் சென்று கேள்வி கேட்டுள்ளார் அப்போது பாஜக மாவட்ட தலைவர் மங்கலம் ரவி ஆயுதங்களுடன் 10 பேரை அழைத்து சென்றதாக தெரிகின்றது.

அப்போது பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரனை பார்த்து பேசிக் கொண்டிருந்தபோது பாஜக மாவட்ட தலைவர் ரவியின் ஆதரவாளர்கள் இந்து மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரனை தாக்கியதாகவும் அதற்கு பதிலடியாக இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு குழு தலைவர் சங்கர். ரவியை திருப்பி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ஈஸ்வரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டதில் இருவரும் காயம் அடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தெரிவிக்கையில், மனதின் குரல்  நூறாவது வார நிகழ்ச்சி முன்னாள் பாஜக மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜகவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் இந்து மக்கள் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தங்களை வேண்டுமென்றே இன்று மாலை வம்புக்கு இழுத்து சண்டையிட்டதாக தெரிவித்தார்.


இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவி தெரிவிக்கையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அடிக்கடி பாஜகவில் தலையிட்டு பல முறைகேடுகளை செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாட்டில் அடிக்கடி மோதல் ஏற்படும். அந்த மோதலின் வெளிப்பாடாக இன்று என்னை இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வேண்டுமென்றே தாக்கியுள்ளனர். என்னை தாக்கிய சம்பவம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் தெரிவிக்கவுள்ளோம். அவர் ஆலோசனைப்படி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவியின் சட்டை கிழிந்து, வேட்டி அவிழ்க்கப்பட்டு உள்ளாடையுடன் ஓடியது மற்றும் உருட்டு கட்டைகளைக் கொண்டு இருதரப்பினரும் தாக்கிக்கொண்டது ஆகியவை வீடியோகாட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.