வைரல்
வீடுகளின் கதவைத் தட்டிய கரடி... வைரலாகும் சிசிடிவி காட்சி ...!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, வீடுகளின் கதவைத் தட்டிய கரடியின் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி, குடியிருப்புப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்களுக்குள் செல்லும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் ஜெகதளா கிராமத்திற்குள் நுழைந்த கரடி ஒன்று, அங்கிருந்த வீட்டின் கதவைத் தட்டியது. தொடர்ந்து நடந்து சென்ற கரடி, எதிரே இருந்த வீட்டின் கதவையும் தட்டியது.
இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான நிலையில், கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.