சினிமா பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த காவலரை பாராட்டி ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கிய காவல் ஆணையர்..!

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் சினிமா பாணியில் திருடர்களை காவலர் விரட்டி பிடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மங்களூரு மாநகர் நேரு மைதானம் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை மிரட்டி மர்ம நபர்கள் 3 பேர் செல்போன், பணம் உள்ளிட்டவைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

இதனை அவ்வழியாக காரில் வந்த வருண் என்ற காவலர் பார்த்துவிட்டு சினிமா பாணியில் அவர்களை சாலையில் துரத்திச் சென்று பிடித்துள்ளார். இதில் ஹரிஷ் புஜாரி, சமந்த் என இரண்டு பேர் சிக்கிய நிலையில், தப்பியோடிய ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, துணிச்சலாக செயல்பட்டு திருடர்களை விரட்டி பிடித்த காவலருக்கு மாநகர காவல் ஆணையர் சசிகுமார் பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்...