டுவிட்டரில் மீண்டும் டிரெண்டாகும் ‘Go back modi’ ஹேஸ்டேக்!

டுவிட்டரில் மீண்டும் டிரெண்டாகும் ‘Go back modi’ ஹேஸ்டேக்!

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தரவுள்ள நிலையில், டுவிட்டரில் ‘Go back modi’ ஹேஸ்டேக் மீண்டும் டிரெண்டாகியுள்ளது.

ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம், #GobackModi என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்வது வழக்கம். அந்தவகையில் வெகுநாட்களுக்கு பிறகு, சென்னை வருகை தரும் மோடி, நேரு அரங்கில்  இன்று 31 ஆயிரத்து  400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் ‘Go back modi’ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.