திருமணத்தில் மீந்த உணவை ரோட்டில் வசித்தவர்களுக்கு விருந்து வைத்த பெண்: இணையத்தில் கலக்கும் புகைப்படம்...

திருமணத்தில் மிஞ்சிப்போன உணவுகளை எடுத்து வீதியில் இருந்த முதியவர்களுகு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் மீந்த உணவை ரோட்டில் வசித்தவர்களுக்கு விருந்து வைத்த பெண்: இணையத்தில் கலக்கும் புகைப்படம்...
Published on
Updated on
1 min read

வங்காளத்தில் பெண் ஒருவர் தனது தம்பியின் திருமணத்தில் மிஞ்சிப்போன உணவுகளை எடுத்துகொண்டு வந்து இரவில் ரயில் நிலையத்தில் வைத்து அனைவருக்கும் பரிமாறியது சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது. திருமண உடையில் ரனாகத் ரயில் நிலையத்தில் வாளிகளில் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பியிருக்க காகித ப்ளேட்களில் தேவைப்படுவோருக்கு உணவு பரிமாறியிருக்கிறார் பாப்பியா கர். சுமார் இரவு ஒரு மணி அளவில் நடந்த இந்த நிகழ்வை திருமண புகைப்படக்காரர் நிலஞ்சன் மண்டல் புகைப்படங்களாகப் பதிவு செய்திருக்கிறார். 

அந்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது திருமணத்திலும் இதே போன்று செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர். ஒருவர் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியாது, ஆனால் என் திருமணத்தில் இதே போன்று உணவு தேவைப்படுவோருக்கு பகிர்ந்தளிக்கப்படும், என்னுடைய பதின் பருவத்திலிருந்து நான் இதை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com