டைட்டானிக் கப்பலை போல் வீடு கட்டிய கட்டட தொழிலாளி..!இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

டைட்டானிக் கப்பலை போல் வீடு கட்டிய கட்டட தொழிலாளி..!இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

மேற்கு வங்கம் மாநிலத்தில் டைட்டானிக் கப்பலை போல வீடு ஒன்றை தன் சொந்த உழைப்பில் தம்பதி ஒருவர் கட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியான மின்டு ராய் என்ற தம்பதி டைட்டானிக் கப்பல் வடிவில்  3 மாடிகள் கொண்ட கனவு இல்லத்தை கட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, டைட்டானிக் கப்பலை போல் வீடு ஒன்றை தன் சொந்த உழைப்பில் கட்ட வேண்டும் என்று எண்ணி, அதற்கான பணியை கடந்த 2010 ஆம் ஆண்டில் கட்ட தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து, இன்று வரை கட்டி வரும் இந்த டைட்டானிக் வீட்டிற்கு இதுவரை 15 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் எனவும், இதன் மேல் தளத்தில் ஒரு உணவு விடுதியை தொடங்க உள்ளதாகவும் அந்த தம்பதி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த டைட்டானிக் வீடு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.