
லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, ‘75ல் இந்தியா’ என்ற தலைப்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது தந்தையின் மரணம் பற்றி பேசிய அவர், மன்னிப்பு என்ற வார்த்தை மட்டுமே நினைவுக்கு வருவதாகவும், அவரது மரணம் மூலம் வாழ்க்கை பற்றிய மிக முக்கிய பாடத்தை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலங்களை ஒன்றிணைத்ததே பாரதம் என்றும், ஆனால் மோடி அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்காத கண்ணோட்டத்தை உருவாக்கி வருவதாகவும், இது இந்தியாவின் சித்தாந்தத்துக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.