சர்வதேச புக்கர் விருதை வென்றது கீதாஞ்சலி ஸ்ரீயின் "டோம்ப் ஆஃப் சாண்ட்" நாவல்..!

புக்கர் விருதை வென்ற முதல் இந்திய நாவல் என்ற பெருமையை பெற்றது "டோம்ப் ஆஃப் சாண்ட்”.

சர்வதேச புக்கர் விருதை வென்றது கீதாஞ்சலி ஸ்ரீயின் "டோம்ப் ஆஃப் சாண்ட்" நாவல்..!

கீதாஞ்சலி ஸ்ரீயின் "டோம்ப் ஆஃப் சாண்ட்" என்ற நாவல் சர்வதேச புக்கர் விருதை வென்ற முதல் இந்தி நாவல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 12 நாடுகளில் இருந்து போட்டியிட்ட ஏராளமான மொழிபெயர்ப்பு நாவல்களில் எழுத்தாளர்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் புக்கர் பரிசை கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார்.

ரெட் சமாதி என இந்தியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் டெய்சி ராக்வெல் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் விருதின் பரிசுத்தொகை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ புத்தகம் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு ஆழ்ந்த மனஅழுத்தத்தை அனுபவிக்கும் 80 வயது மூதாட்டியின் கதையை விவரிக்கிறது.