அதிஷ்டம்னா இப்படி இருக்கனும்!! வலையில் சிக்கிய அதிசய மீன்களால் கோடீஸ்வரனாக மாறிய மீனவர்!!..  

மகாராஷ்டிரா மாநிலத்தில் விலை உயர்ந்த தங்க இதய மீன்களைப் பிடித்த மீனவர் ஒரே நாளில் கோடீஸ்வரக உயர்ந்துவிட்டார்.

அதிஷ்டம்னா இப்படி இருக்கனும்!! வலையில் சிக்கிய அதிசய மீன்களால் கோடீஸ்வரனாக மாறிய மீனவர்!!..   

பால்கர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரகாந் தாரே என்ற மீனவர் தடை காலம் முடிந்து கடலில் மீன்பிடிக்க சென்ற அவருக்கு தங்க இதய மீன் என்று அழைக்கப்படும் கோல் மீன்கள் கிடைத்தன. பெரிய அளவிலான 157 மீன்கள் வலையில் சிக்கியதால் அவருடன் படகில் இருந்தவர்களும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர்.

கரைக்கு கொண்டு வரப்பட்டதும் அந்த மீன்கள் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோல் மீன்கள் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை தயாரிக்கப் பயன்படுவதால், வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் காணப்படும் இந்த மீன், ஒரு கிலோ 5 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதால், அதிக விலை கொண்ட கடல் மீன்களில் முன்னணியில் உள்ளது.