சேவலை வம்புகிழுத்த குரங்கு குட்டிகள்.....பின் வாங்காமல் எதிர்த்து நின்று சாமாளித்த சேவல்....இணையத்தில் வைரலாகும் வீடியோ....!!

உதகையிலுருந்து முதுமலை செல்லக் கூடிய கல்லட்டி மலைப்பாதையில் சேவலை சேட்டைகிழுத்த குரங்கு குட்டிகள் குறித்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது...

சேவலை வம்புகிழுத்த குரங்கு குட்டிகள்.....பின் வாங்காமல் எதிர்த்து நின்று சாமாளித்த சேவல்....இணையத்தில் வைரலாகும் வீடியோ....!!

குறும்புதனமாக செயல்படும்  குழந்தைகளை குரங்கு சேட்டை செய்யாதே என்பார்கள். அப்படி ஏன் சொல்கிறார்கள் என்பதை இந்த வீடியோவை பார்த்தாலே தெரியும்.  நீலகிரி மாவட்டம் உதகை அருகே கல்லட்டி சாலையில் மேய்ந்து கொண்டிருந்த சேவலை 3 குட்டி குரங்குகள் சீண்டியதுடன் அதனுடைய கொண்டையை பிடிக்க முயன்றன.  

3 குட்டி குரங்குகளுக்கு சாவலாக சேவலும் பின்வாங்காமல் எதிர்த்து நின்று சம்மாளித்தது. ஒரு கட்டத்தில் சேவல் கொத்தி விடுமோ என்ற அச்சத்தில் முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றன. இந்த காட்சி சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.