குழாயை திறந்து தாகத்தை தீர்த்துக் கொண்ட குரங்கு...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

குழாயை திறந்து தாகத்தை தீர்த்துக் கொண்ட குரங்கு...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Published on

விழுப்புரம் அருகே குடிநீர் குழாயினை திறந்து குரங்கு ஒன்று தாகத்தை தீர்த்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோடைகாலம் தற்போது துவங்க உள்ள நிலையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிக அளவு காணப்படுவதால் தாகத்தை தணிக்க முற்பட்ட குரங்கு அரசு அலுவலகத்தில் இருந்த குழாயை திறந்து அழகாக தண்ணீர் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள், கோடைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க நீர்நிலை அற்ற பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com