குழந்தைகள் போலவே துணியால் முகத்தை மூடி கண்ணாமூச்சி விளையாடிய குரங்கு...

உளுந்தூர்ப்பேட்டை அருகே குழந்தைகள் போலவே துணியால் முகத்தை மூடி கண்ணாமூச்சி விளையாடும் குரங்குகளின் சேட்டை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

குழந்தைகள் போலவே துணியால் முகத்தை மூடி கண்ணாமூச்சி விளையாடிய குரங்கு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை நகர் ரெயில்வே மேம்பாலம் அருகே குரங்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.இந்நிலையில் வனவியல் விரிவாக்க மையத்தில் அவ்வப்போது இரண்டு குட்டி குரங்குகள் செய்யும் சேட்டைகள் காண்போரை சிரிப்பில் ஆழ்த்தி வருகிறது. 

அப்போது,அங்கு நின்று கொன்று இருந்த மோட்டார் வாகனத்தின் பெட்ரோல் டேங் கவரில் எதாவது திண்பண்டங்கள் இருக்கின்றதா என்று இரண்டு குரங்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக டேங் கவரின் ஜிப்பை திறந்த போது அதில் பைக் துடைப்பதற்காக வைத்திருந்த துணியை எடுத்துக்கொண்டு குழந்தைகள் முகத்தை மூடிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடுவது போல் இரண்டு குட்டி குரங்குகளும் முகத்தை மூடிக்கொண்டு விளையாடி வந்துள்ளது.இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து நகைத்தனர்.