குட்டிகளுக்கு விளையாட்டு காண்பிக்க பொம்மை எடுத்து வந்த தாய் நாய் .. வைரல் வீடியோ

தாய் நாய் ஒன்று தனது குட்டிகளுக்காக பொம்மை ஒன்றை எடுத்து வந்து வழங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குட்டிகளுக்கு விளையாட்டு காண்பிக்க பொம்மை எடுத்து வந்த தாய் நாய் .. வைரல் வீடியோ

தாய் நாய் ஒன்று தனது குட்டிகளுக்காக பொம்மை ஒன்றை எடுத்து வந்து வழங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவன்களுக்கும் இடையே உள்ள பிணைப்பாக இருக்கிறது.

அண்மையில், உரிமையாளர் ஒருவர் வளர்த்த டிதா என்ற நாய்க்கு 6 குட்டிகள் பிறந்தன. இந்த குட்டிகள் இன்னும் கண்விழிக்காத நிலையில், அவை மோப்ப திறனுடன் ஊர்ந்தே தாயின் அருகே சென்று வருகின்றன.

இந்தநிலையில் தனது குட்டிகளுக்கு விளையாட்டு காண்பிக்க, டிதா தனக்கு மிகவும் விருப்பமான பச்சை நிற பொம்மையை எடுத்து வந்து குட்டிகளின் அருகே போட்டது.  

தாயின் பாசத்தை குறிப்பிட்டு, அந்த உரிமையாளர் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வரைலாகி வருகிறது.