கனமழையால் கரையோரம் கட்டப்பட்ட வீடு சரிந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல்...

வடகிழக்கு பருவமழையால்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்  திருப்பதியில்  நதிக்கரையோரம் கட்டப்பட்ட வீடு சரிந்து விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டது. 

கனமழையால் கரையோரம் கட்டப்பட்ட வீடு சரிந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல்...

வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்றும், இன்றும், தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர். 

ஆந்திரா சுவர்ணமுகி நதிக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடிவீடு மண்சரிவு காரணமாக சரிந்து வெள்ளத்தில் விழுந்து அடித்து செல்லப்பட்டது. எச்சரிக்கையாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அதேப்போல் திருப்பதியில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பசு மாத்தூர் பகுதியில் மோர்தானா அணையிலிருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டதால், ஏற்பட்ட வெள்ளத்தில்  ஆற்றின் ஓரமாக கட்டப்பட்டு இருந்த அடுக்குமாடி கட்டிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. வேலூர் அருகே  ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில்  20  மேற்பட்ட  மாடுகள் தண்ணீரி்ல் அடித்து  செல்லப்பட்ட காட்சி  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.