தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்.. காப்பாற்ற ரயில் முன் பாய்ந்த "ரியல் ஹீரோ".. திக் திக் நிமிடங்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்ற, தன் உயிரியை பணயம் வைத்து காப்பாற்றிய நபருக்கு சமூக வலைதங்களில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்.. காப்பாற்ற ரயில் முன் பாய்ந்த  "ரியல் ஹீரோ".. திக் திக் நிமிடங்கள்

மத்திய பிரதேச மாநிலம், போபால் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தவறுதலாக விழுந்த பெண்ணை தொழுகை முடிந்து வந்த ஒரு நபர் காப்பாற்றிய வீடியோ வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், போபால் நகர் அருகே உள்ள பர்கேடி பகுதியை சேர்ந்த முகமது மெகபூப் என்ற 37 வயதான நபர் அப்பகுதியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றார். தொழுகை முடிந்து பிறகு அப்பகுதி ரயில்வே தண்டவாளம் ஓரமாக நடந்து முகமது மெகபூப் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அதே பகுதியில் அதிகமான மக்கள் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த 20 வயதுடைய பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நெருக்கமாக வந்துகொண்டிருந்தது.. இதை கண்ட அந்த பெண் திகைத்து போய் அலறி கொண்டு தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டார்.. அச்சத்தில் என்ன செய்வது என்று கூடு தெரியாமல் அந்த  பெண்ணால் எழுந்து நிற்க கூட முடியவில்லை... 

அங்கிருந்த அனைவரும் ரயில் நெருக்கமாக வருவதை கண்டு அச்சத்தில் உறைந்து போய் பார்த்து கொண்டிருந்தனர்.. அப்போது, கொஞ்சம் கூட அச்சப்படாமல், தனது உயிரியை கூட பொருட்படுத்தாமல், முகமது மெகபூப் ரயில் தண்டவாளத்தில் குதித்து அந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் தண்டவாளத்திற்கு இடையில் இழுத்து படுக்க வைத்தார்.. 

மேலும் அந்த பெண்ணை தலையை தூக்க விடலாம் பார்த்து கொண்டார். 28 பெட்டிகள் கொண்ட ரயில் செல்லும் வரை இருவரும் தண்டவாளத்தில் படுத்து கொண்டனர்... ரயில் சென்றதும் இருவரையும் அங்கிருந்த மக்கள் தூக்கி நிறுத்தினர்.. தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் அந்த பெண்ணை காப்பாற்றிய முகமது மெகபூப்-வை மக்கள் அனைவரும் பாராட்டினர்.. 

இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர், கண்ணீர் மல்க முகம்மதுவுக்கு நன்றி தெரிவித்தனர்.. கடந்த 5ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் முகமது மெகபூப் நண்பர் சோயப் ஹஸ்பி என்பவர் மூலம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. 20 வயது இளம்பெண்ணின் வாழக்கையை காப்பாற்றிய முகமதுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்..