சாலையில் தேங்கிய நீரில் குளித்த இளைஞர்...! இணையத்தில் வைரலான வீடியோ...!

கேரள மாநிலம் மலப்புறத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தேங்கி கிடந்த மழை நீரில் இளைஞர் ஒருவர் குளித்து, துவைத்து, தவம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் இருந்து பாலக்காடு செல்லும் பிராதான சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டுள்ளது.  சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். எனவே இதற்கு எதிர்ப்பு தெருவிக்கும் வகையில், இளைஞர் ஒருவர் புதுவிதமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார். பாண்டிக்காடு பகுதியில் சாலையின் நடுவே உள்ள குழியில் தேங்கி கிடந்த மழைநீரில் அதே பகுதியை சேர்ந்த கம்சா என்ற இளைஞர் வாலி, சோப்புடன் வந்து தேங்கி கிடந்த நீரில்  குளித்தும், துணிகளை துவைத்தும், நீருக்குள் அமர்ந்து தவம் செய்யவும் துவங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் லதீப், சாலை உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்த பின்பு அந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை நடுவே தேங்கிய மழை நீரில் குளித்து, துவைத்து, தவம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.