பெண் சிங்கத்தை எட்டி உதைத்த வரிக்குதிரை: வைரலாகும் வீடியோ

ஆப்ரிக்க வனப்பகுதியில் வரிக்குதிரை ஒன்று பெண் சிங்கத்தை எட்டி உதைத்துவிட்டு, அதன் பிடியிலிருந்து தப்பியோடிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

பெண் சிங்கத்தை எட்டி உதைத்த வரிக்குதிரை: வைரலாகும் வீடியோ

ஆப்ரிக்க வனப்பகுதியில் வரிக்குதிரை ஒன்று பெண் சிங்கத்தை எட்டி உதைத்துவிட்டு, அதன் பிடியிலிருந்து தப்பியோடிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. வனப்பகுதிகள் நாள்தோறும் ஆச்சரியமூட்டும் பல நிகழ்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு விலங்குகளும் தன்னை தற்காப்பதற்கும், தனக்கான உணவினை  தேடிக்கொள்வதற்கும் படாதபாடு படுகிறது. அண்மையில் ஆப்ரிக்க வனப்பகுதியில் ஹாயாக சுற்றிய வரிக்குதிரையை நோட்டமிட்ட பெண் சிங்கம் ஒன்று புதருக்குள் இருந்து திடீரென வெளியே வந்தது. இதைக்கண்டதும் அதிர்ச்சியில் வெலவெத்துப்போன வரிக்குதிரை அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. ஆனால் அதனை துரத்திய பெண் சிங்கம், வரிக்குதிரியின் மீது பாயவே, உஷாரான வரிக்குதிரை ஓங்கி பின்னங்காலால் சிங்கத்தின் மீது ஒரு உதைவிட்டு, அந்த நேரத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பியது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CQX09jYAD0Z/